
சென்னை சங்கமம்' தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையராங்கில் நடைபெற்றது. விழாவில், முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு, ஒரு வாரம் நடைபெறும் `சென்னை சங்கமம்' நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். விழாவில், மத்திய மந்திரி வயலார் ரவி, மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை மந்திரி அம்பிகா சோனி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடக்க விழாவினையொட்டி பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சியில் மேடையில் நடைபெற்றன. 1 1/2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் கருணாநிதி, சிறப்பு விருந்தினர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் ரசித்து பார்த்தனர். `டிரம்ஸ்' சிவமணியில் இசை நிகழ்ச்சி அரங்கத்தையே அதிரவைத்தது. மத்திய மந்திரிகள் ராசா, வேங்கடபதி, சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மு.க.ஸ்டாலின், பொன்முடி, பரிதிஇளம்வழுதி, தங்கம் தென்னரசு, சுரேஷ்ராஜன், எ.வ.வேலு, கவிஞர் வைரமுத்து, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர். விழாவிற்கு வந்தவர்கள் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. வரவேற்று பேசினார். `சென்னை சங்கமம்` நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசுகையில், திருமங்கலம் எப்படி எனக்கு நல்ல செய்தியைச் சொல்லப் போகிறதோ அதைப் போல இந்தத் திருவிழா, பெரு விழாவாக மாறி நல்ல செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கின்றது என்று கூறினார்